திருப்பூரில் மஜக-வில் இணைந்த இளைஞர்கள்!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் P.M.இக்பால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில செயலாளர் M.H.ஜாபர் அலி அவர்கள் கலந்து கொண்டு மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில் திரளான இளைஞர்கள் தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர்.

புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை மாநில செயலாளர் வழங்கினார்.

இதில் மாவட்ட, பகுதி, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.