வடசென்னை மேற்கு மாவட்டத்தில் கொடி ஏற்று நிகழ்ச்சி

மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மேற்கு மாவட்டம் புளியந்தோப்பு பகுதியில் இன்று மஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட செயளாலர் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.

அவருடன் மாநில துணை செயலாலரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான பார்த்திபன் உடனிருந்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முகமது ரபிக், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹனீப், ரஜாக் , திரு.வி.க நகர் பகுதி நிர்வாகிகள் செல்வம், நிஷார், அஜ்மல் கான், நிஜாம், கரிம், செய்யது இப்ராஹிம், சலீம் சேட், பெரம்பூர் பகுதி செயலாளர் சேக் மைதீன், துணைச் செயலாளர் இணையத்துல்லா மற்றும் வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.