திருவாரூர் மாவட்ட மஜக ஆலோசனைக் கூட்டம் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்….

ஜூன்.04.,

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் சிறப்பாக களப்பணி ஆற்றிய பிறகு அவர்களுக்கு 40 நாட்கள் தொடர் விடுமுறை தலைமையின் சார்பில் வழங்கப்பட்டதுm

மே 31 அன்றுடன் விடுமுறை முடிவடைந்த நிலையில் ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து நிர்வாகிகளும் தொண்டர்களும் சுறுசுறுப்பாக களம் இறங்கியுள்ளனர்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு மாவட்ட நிர்வாக கூட்டங்கள், செயற்குழு கூட்டங்கள், பொதுக்குழு கூட்டங்கள், செயல்வீரர்கள் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என தலைமையின் சார்பில் கடைசியாக நடைபெற்ற சிறப்பு நிர்வாக குழுவில் முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட செயலாளர் புலிவலம் சேக் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

இதில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

கிளைகள் நிர்வாக சீரமைப்பு, செயல்படாதவர்களை விடுவித்து விட்டு புதியவர்களை பொறுப்புக்கு அமர்த்துதல், புதிய கிளைகள் கட்டமைப்பு ஆகியன குறித்து இதில் விவாதிக்கப்பட்டது .

முன்னதாக கட்சியின் மாநில துணைத்தலைவர் மண்ணை செல்லச்சாமி, துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் ஆகியோர் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து கருத்துரைகளை வழங்கினார்கள்.

சுமார் 3.30 மணி நேரம் இக்கூட்டம் நடைபெற்றது .

இதில் ஒவ்வொருவரின் கருத்துகளும் பரிசீலிக்கப்படும்.

நிறைவாக மாவட்ட பொருளாளர் கட்டிமேடு ரஹ்மத்துல்லாஹ் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
03.06.2024.