பொதக்குடி இஃப்தார் நிகழ்ச்சி.. இலங்கை மக்கள் வட இந்தியர்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்! மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

ஏப்.24., திருவாரூர் மாவட்டம் பொதக்குடி ஊராட்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) செல்வாக்கு மிக்க களங்களில் ஒன்றாகும்.

நேற்று ஜமாத்தினர் சார்பில் இஃப்தார் ஒன்று கூடலை முன்னிட்டு , சமூக நல்லிணக்க நிகழ்ச்சி பிரம்மாண்ட ஏற்பாட்டுடன் நடைபெற்றது.

ஊரெங்கும் மஜகவின் சார்பில் கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு அனைவரும் வரவேற்கப்பட்டனர்.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி K.கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் TRP.ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

கருணை பொழியும் ரமலான் மாதத்தில் எல்லோரும் ஒன்று கூடியுள்ளோம்.

நமது தாய் மண்ணில் எல்லோரும் சகோதரத்துவமாக வாழ்கிறோம்.

இங்கும் வட இந்தியாவைப் போல பிரிவினையை ஏற்படுத்த சிலர் முனைகிறார்கள்.

அதை அனுமதிக்க கூடாது.

இந்த உணவைதான் உண்ண வேண்டும், இந்த ஆடையைத் தான் அணிய வேண்டும், இந்த கலாச்சாரத்தைத் தான் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள். இது சட்டத்திற்கு புறம்பானது.ஒற்றுமைக்கு எதிரானது.

சிலர் மக்களுக்கு மத்தியில் வெறுப்பை ஊட்டி, ரத்த ஆறுகளை ஒட விட்டு, அதிகாரத்தை தக்க வைக்க நினைக்கிறார்கள்.

தமிழ் மண்ணில் அதற்கு இடமில்லை.

நாம் எல்லோரும் சகோதரர்கள். சகோதரத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் நாட்டுக்கே எடுத்துக்காட்டாக வழிகாட்டுபவர்கள்.

இந்நேரத்தில் இலங்கையில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பார்க்கிறோம்.

மதத்தாலும், இனத்தாலும், மொழியாலும் சிங்கள மக்களையும், இலங்கை முஸ்லிம்களையும், தமிழர்களையும் பிரித்து மோதவிட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் தமிழர்களை கொன்றொழித்தார்கள்.

கொரணாவில் இறந்த முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் எதிர்ப்பை மீறி எரித்தார்கள்.

இன்று இலங்கை மக்கள் எல்லாவற்றையும் புரிந்துக் கொண்டு விட்டார்கள்.

எங்களுக்கு நாடுதான் முக்கியம் என கருதி எல்லோரும் வேற்றுமைகளை மறந்து விட்டு ஒன்றுபட்டு போராடுகிறார்கள்.

எங்களுக்கு உணவும்,உரிமையும், நிம்மதியுமே முக்கியம் என முழங்குகிறார்கள்.

நாட்டு நலனை முதன்மைப்படுத்தி போராடி வருகிறார்கள்.

அவர்களின் போராட்டம் வட இந்தியாவில் வாழும் மக்களுக்கு வகுப்பெடுக்கிறது.

நாம் எல்லா வட இந்தியர்களையும் குற்றம் சாட்டவில்லை என்பதையும் கூறிக் கொள்கிறோம்.

மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு இதுதான் நடக்கும் என்பதை இலங்கை மக்களின் போராட்டம் உணர்த்துகிறது.

இது இங்குள்ளவர்களுக்கு எச்சரிக்கையாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளர் பொதக்குடி ரபியுதீன் உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பின்னர் மஜக மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் கலந்துரையாடினார்.

செப்டம்பர் 10 , தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் குறித்த ஆயத்தப் பணிகளை தொடங்குமாறு கேட்டுக் கொண்டார்.

பின்னர் ரமலான் மாதம் முழுக்க ஏழை நோன்பாளிகளுக்கு தினமும் 200 க்கும் அதிகமானோருக்கு சஹர் எனும் அதிகாலை நேர உணவு பொட்டலங்களை வழங்கி வரும் பொதக்குடி மஜகவினரின் பணிகளையும் பாராட்டினார்.

நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட துணைச் செயலாளர் PH. நத்தர் கனி, கிளை நிர்வாகிகள் செ. முகவர் ஹஸன், A.ஜலால்தீன், அபி தாஹிர் அப்பா, அத்திக்கடை, கூத்தாநல்லூர் மஜகவினர் என நூற்றுக்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்களும் பொதுச் செயலாளருடன் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மஜக_திருவாரூர்_மாவட்டம்
23.04.22