நேருவின் சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துங்கள்… நாகை அரசு நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

ஏப்ரல்.23., தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் சார்பில் சமூக நீதி, பொருளாதார சமத்துவம், வளர்ச்சி, இணக்கம் ஆகிய சிந்தனைகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பேச்சுப் போட்டி நடைபெற்று வருகிறது.

நிறைவாக தேர்வு செய்யப்பட்ட மூவருக்கு தமிழக முதல்வர் அவர்கள் பரிசளிக்க விருக்கிறார்.

நாகையில் சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினர் நாகூர் A.B.தமீம் அன்சாரி முன் முயற்சியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையேற்றார்.

இதில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் MP, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், தமுமுக பொதுச் செயலாளர் பேரா.ஹாஜாகனி ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.

இதில் வாழ்த்துரையாற்றிய மஜக பொதுச்செயலாளரும், முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி அவர்கள், மாணவ, மாணவிகள் நேருவின் சிந்தனைகளை நெஞ்சில் ஏந்த வேண்டும் என்றும், காந்தியடிகளும், அப்துல் கலாமும் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என்றும், ஒற்றுமையை வளர்க்கும் சிந்தனைகளை ஊக்குவிக்கு வேண்டும் என்றும், பிரிவினை எண்ணங்களை தூக்கியெறிய வேண்டும் என்றும் பலத்த கரவொலிகளுக்கிடையே பேசினார்.

சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பாராட்டினார்.

சிறுபான்மை ஆணையத்திற்கு பீட்டர் அல்போன்ஸ் தலைமையேற்ற பிறகு அது சிறப்பாக செயல்படுவதாகவும், அதன் உறுப்பினரான நாகூர் A.B. தமீம் அன்சாரியின் பணிகள் சிறப்பாக இருப்பதாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் மஜக மாநிலச் செயலாளர் நாகை. முபாரக், நாகை மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாசுதீன், மாவட்ட பொருளார் சதக்கத்துல்லா, தகவல் தொழில் நுட்ப அணியின் மண்டல செயலாளர்கள் ரெக்ஸ்.சுல்தான், தோப்புத்துறை முபீன், மஜக செயல்வீரர் முரளி, நாகூர் சேவைக்குழு தலைவர் சித்தீக் ஆகியோரும் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
23.04.2022