அமைதியை பராமரிக்க வேண்டும்! திருப்பூண்டியில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!

ஏப்ரல் 23, நாகை மாவட்டம் திருப்பூண்டியில் A.K ரெஸ்ட்டாரண்ட் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு விட்டு, சில சமூக விரோதிகள் பணம் கொடுக்காமல் கடையை சேதப்படுத்தி, உரிமையாளர் அன்சாரி என்பவரையும் தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.

இது வணிகர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் இடையிலான பிரச்சனையாக மாறியுள்ளது.

ஏற்கனவே இங்கு உமாபதி என்பவரின் கடையையும் இவ்வாறு சேதப்படுத்தியிருந்ததால் பொதுமக்கள் கோபமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மஜக சார்பில் வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் வேதை.தென்னரசு விடமும் புகார் செய்யப்பட்டது.

இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் திருப்பூண்டி க்கு வருகை தந்து , பாதிக்கப்பட்ட கடையை பார்வையிட்டு, தாக்குதலுக்குள்ளான உரிமையாளரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிறகு திரு.ஞானசேகரன், வர்த்தக சங்க செயலாளர் செல்வம், மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் சாகு உள்ளிட்ட மஜகவினரையும் சந்தித்து நிலவரங்களை கேட்டறிந்தார்.

பிறகு காவல்துறை அதிகாரிகளிடம் பேசுவதாகவும், இனியொரு சம்பவம் இப்பகுதியில் நடக்க அனுமதிக்க கூடாது என்றும் கூறினார்.

மேலும் பொது அமைதியை பராமரிக்க வணிகர்களுடன், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் சபுருதீன், ஒன்றிய செயலாளர் ஜியாவுல் ஹக், கிளைச் செயலாளர் S. ஜியாவுதீன் உள்ளிட்ட திரளான மஜகவினரும் உடனிருந்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி,
#MJK_IT_WING,
#நாகை_மாவட்டம்.