நாகை சட்டமன்ற உறுப்பினருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் திட்டச்சேரி பேரூராட்சி செயலாளர் முஹமது இப்ராஹிம் தலைமையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களை சந்தித்து மஜக நிர்வாகிகள் மனு அளித்தனர்.

இச்சந்திப்பில் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை எம்.எல்.ஏ ஷாநவாஸ் அவர்களிடம் மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் செ.செய்யது ரியாசுதீன், MKP துபாய் மாநகர் துணை செயலாளர் அய்யூப், IT WING கலீல் ஆகியோர் உடனிருந்தனர்