ஊரடங்கில் உணவின்றி தவித்த ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய மஜகவினர்!

ஜுலை.27.,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகமெங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் எதிரொலியாக மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் சாலையோரத்தில் வசித்துவரும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் பொள்ளாச்சி நகர செயலாளர்
ராஜா ஜெமீஷா, அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.

இதில் நகர துணை
செயலாளர் அன்சார், நகர இளைஞரணி செயலாளர் அலாவுதீன், இளைஞரணி பொருளாளர் முஹம்மது இஸ்மாயில், இளைஞரணி துணை செயலாளர்கள் ராஜா, சௌக்கத், முகமது அலி, நகர தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஹபீப் அன்சாரி, மருத்துவ அணி செயலாளர் ஜான்ஸ்கான்,15 வது வார்டு செயலாளர் அப்பாஸ், மற்றும் அஷ்ரப், அஜ்மல், சமீர் உள்ளிட்ட மஜக வினர்கள் கலந்து கொண்டு உணவு பொட்டலங்களை விநியோகம் செய்தனர்.

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJKITWING
#பொள்ளாச்சி_நகரம்
#கோவை_மாநகர்_மாவட்டம்
26/07/2020