கோவையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்ற மஜகவின் சஹர் விருந்து நிகழ்ச்சி… களத்தில் இறங்கிய இளைஞர் பட்டாளம்…

ஏப்:24., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய பகுதி மற்றும் செல்வபுரம் வடக்கு கிளை இணைந்து மாபெரும் சஹர் விருந்து நிகழ்ச்சி பகுதி பொருப்பாளர் இப்ராஹிம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சுமார் மூன்றாயிரம் பேருக்கு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு பறிமாறப்பட்டது.

நேரம் நள்ளிரவு 2.00மணியை கடந்ததும் ஆண்களும், பெண்களும், திரளாக ஒரே நேரத்தில் வந்ததால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

உடனடியாக பகுதி இளைஞர்களும், தோழமை நண்பர்களும், களத்தில் இறங்கி இருக்கைகளை அதிகப்படுத்தி அவர்களை அமரவைத்து உணவு பறிமாறினர்.

நிகழ்ச்சியில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் AK.சுல்தான்அமீர், அவர்கள் பங்கேற்று நிர்வாகிகளின் பணியை பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ஹனிபா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அப்பாஸ், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், மாவட்ட பொருளாளர் பைசல், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் செய்யது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம், பூ காஜா, அக்கீம், மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள் உட்பட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 78வது வார்டு செயலாளர் முகம்மது யூசுப், பொருளாளர் சமீர், துணை செயலாளர்கள் சம்சுதீன், கிதர் முகம்மது, செய்யது, 77வது வார்டு செயலாளர் பீர் முகம்மது, பொருளாளர் இஸ்மாயில், துணை செயலாளர்கள் கமால் பாஷா, ஹாருண், மற்றும் நிர்வாகிகள் அப்பாஸ், செளக்கத், ரியாஸ், உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்…

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
23.04.2022