துபை மன்னர் மற்றும் தமிழக முதல்வருக்கு பாராட்டு… அமீரக MKP இஃப்தார் நிகழ்வில் தீர்மானங்கள்!

ஏப்ரல் 10, நேற்று ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் மஜக சார்பு வெளிநாட்டு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் சார்பில் “இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி’ ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஒன்று கூடலுடன் நடைபெற்றது.

தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அதில் பங்கேற்று சாதனையாளர்கள், சேவகர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

அதில் கீழ்கண்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

*பகுதி 1*

1.துபை மன்னருக்கு பாராட்டு
…………..

இந்த ரமலான் புனித மாதத்தில் உலகெங்கும் வாழும் ஏழை மக்கள் 100 கோடி பேருக்கு உணவு வழங்கும் மனிதநேய திட்டத்தை அறிவித்து அதை செயல்படுத்தியற்காக துபை மன்னர் மேதகு. முஹம்மது பின் ராஷித் அல் மக்தும் அவர்களுக்கு அமீரக தமிழர்களின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்

2. தமிழக முதல்வருக்கு வாழ்த்து
………….

கடந்த மார்ச் மாதம் துபை Expo 2020 நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் தளபதி மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் 6500 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பெற்று சென்றதற்கு அமீரக தமிழர்களின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

3. நல்லிணக்கம் வளர்ப்போம்
……………

அமீரகத்தில் பணிபுரியும் தமிழக மக்கள் இங்கு இந்நாட்டின் சட்ட மரபுகளை பேணி காப்பதுடன்,தங்களது மரபு வழியிலான சமூக நல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய பண்பாடுகளை மேலும் வளர்க்கும் வகையில் பாடுபட வேண்டும் என்றும், அதற்கு மனிதநேய கலாச்சாரப் பேரவை துணை நிற்கும் என்றும் இந்திகழ்வு மூலம் பிரகடனப்படுத்துகிறோம்.

*பகுதி 2,*

இரங்கல் தீர்மானங்கள்

1. மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் பிறந்து நாடெங்கிலும் தனது எழுத்து மற்றும் பேச்சின் மூலம் விழிப்புணர்வு மற்றும் அமைதி பணிகளை மேற்கொண்டு, தனது முதுமை காரணமாக சமீபத்தில் மரணித்த அறிஞர். மவ்லானா வஹீதுதீன்கான் அவர்களின் மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம்.

2. துபாயில் 20 ஆண்டு காலத்திற்கும் மேலாக சமூக சேவை பணியாற்றி கடந்தாண்டு மரணித்த கீழை.ஜெமீல் காக்கா அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க இக் கூட்டம் பிரார்த்திக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தகவல்,

#mkpitwing
#அமீரகம்