திருக்குறள் அரபி மொழியாக்கம்! துபை MKP இஃப்தார் நிகழ்வில் மறு வெளியீடும் வரவேற்பும்!

ஏப்:11., தமிழர்களின் இலக்கியமான திருக்குறள் உலனின் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் வழியில் சென்னை பல்கலைக்கழக அரபு துறை சார்பில் திருக்குறள் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அது பரவலாக அறியப்படாத நிலையில், ஏப்ரல் 9 , 2022 அன்று துபாயில் நடந்த மனித நேய கலாச்சாரப் பேரவை நடத்திய இஃப்தார் நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அதை மறு அறிமுகப்படுத்தி வெளியிடப்பட்டது வளைகுடாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அந்நிகழ்வில் அமீரகத்தில் சாதனை படைத்தவர்கள் மற்றும் சமூக சேவையாற்றியவர்கள் என தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

வளைகுடாவில் வசிக்கும் மஜக சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையினர் அரபு மக்களிடம் இதை கொண்டு சேர்க்கும் வகையில் பணிகளை செய்ய வேண்டும் என பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
09.04.2022