துபாய் MKP இப்தார் நிகழ்வு..! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு ..!

ஏப்:10., வளைகுடாவில் தமிழக மக்கள் மத்தியில் கடமையுனர்வுடன் தொண்டாற்றி வரும் மஜக சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சார பேரவை ( MKP ) ஐக்கிய அரபு அமீரகத்திலும் மனிதநேய பணிகளை செய்து வருகிறது.

வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுத்தல்,மருத்துவ சேவைகளை ஆற்றுதல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்த்தல், தமிழக கலாச்சாரத்தை பேணுதல் என அதன் பணிகள் பிற இந்திய மாநில மக்களையும் கவரும் வகையில் திகழ்கிறது .

ஏற்கனவே இங்கு இரண்டு மாநாடுகளையும், இரண்டு இஃப்தார் நிகழ்ச்சிகளையும் நடத்தி அனைவரின் மதிப்புமிக்க அமைப்பாக MKP திகழ்கிறது.

அதன் தொடர்ச்சியாக துபாயில் இன்று மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் முன்றாவது இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

தாயகத்தில் இருந்து வருகை புரிந்த மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

துபாய் டேரா பகுதியில் பிரம்மாண்ட மிக்க துபாய் பெண்கள் சங்க (Womens Association )அரங்கில் மாலை 5:00 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வு பெரும் மக்கள் எழுச்சியோடு நடைபெற்றது.

இவ்வரங்கின் நுழைவாயிலுக்கு புகழ் பெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும்,சச்சார் கமிட்டியின் தலைவருமாக இருந்து பணியாற்றிய நீதியரசர்.ராஜிந்திர் சச்சார் அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

அரங்கத்திற்கு இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்து, அமைதிக்காக சேவைகள் பல ஆற்றி, கடந்தாண்டு மறைந்த போபாலை சேர்ந்த மௌலானா வகீதுதீன்கான் அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

அதுபோல் மேடைக்கு இந்திய மற்றும் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும், பொருளாதார ஏற்றங்களையும் நல்வாய்ப்பாக வழங்கிய அமீரக முன்னாள் மன்னர் மேதகு ஷேக் ஜாயித் பின் நஹ்யான் அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இந்நிகழ்வுக்கு மாலையில் இருந்து துபாயின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி அபுதாபி,ஷார்ஜா,அஜ்மான்,ராசல் கைமா,புஜேரா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழக மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

கோவிட் நெருக்கடிக்களுக்கு பிறகு நடைபெறும் தமிழக மக்களின் முதல் பண்பாடு நிகழ்ச்சி என்பதால் மனிதநேய சொந்தங்கள் ஆர்வத்தோடு குவிந்தனர்.

நிகழ்ச்சிக்கு அமீரக மண்டல MKP செயலாளர் டாக்டர் A. அசாலி அஹமது அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

நீதிபோதனையை சகோ.M.அப்துல் ரசீது அவர்கள் வழங்க,Y.M.ஜியாவுல் ஹக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் சிறப்பம்சமாக சென்னை பல்கலைக்கழக அரபு துறையால் வெளியிடப்பட்டிற்கும் திருக்குறள் அரபு மொழிப்பெயர்ப்பை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மறு அறிமுகம் செய்யும் வண்ணம் முக்கிய பிரமுகர்களுக்கு அதை வழங்கினார்.

நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்த துபை தலைமை குற்றவியல் காவல்துறை இணை இயக்குனர் உமர் முகம்மது பின் ஹமது அவர்கள் அதன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

அவரிடம் திருக்குறளின் சிறப்பம்சங்களை பொதுச் செயலாளர் அவர்கள் விளக்கினார்.

உமர் முகம்மது பின் ஹமத் அவர்கள்,தனது வாழ்த்துறையில் இந்த பெரும் ஒன்றுகூடலை பாராட்டி விட்டு, இந்தியாவும், அமீரகமும் இணைந்து வளர்ச்சி அடைவோம் என பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் கூறினார்.

அதன் இரண்டாவது பிரதியை ஆரிபா குழுமத் தலைவர் சுல்தான் ஆரிபின் அவர்களும், அடுத்தடுத்த பிரதிகளை அல் அய்ன் இந்தியன் சோசியல் சென்டர் தலைவர் M. முபாரக், அபுதாபி மர்ஹபா அசோசியேசன் தலைவர் சுகைப்தீன் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.

தமிழர்களின் இலக்கியமான திருக்குறளை அமீரகத்தில் பரப்பும் மனிதநேய கலாச்சார பேரவை (MKP) யின் முயற்சியை பலரும் பாராட்டினர்.

அதுபோல் அமீரக வாழ் தமிழர்கிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைவரும் அங்கு வெளிவரும் தினத்தந்தி நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டது.

தமிழகத்திலிருந்து இங்கு வந்து உழைப்பிலும் முன்னேறி,சமூக சேவையிலும் ஆர்வம் காட்டுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் MKP சார்பில் விருதுகளை வழங்கி ஊக்குவித்தார் மஜக பொதுசெயலாளர்.

இவற்றில் சிறந்த தொழிலதிபர் மற்றும் சமூக சேவைக்கான விருது சர்வதேச மலர் வணிகத்தில் முத்திரை பதித்துவரும் சகோ.நடுக்கடை M.M யஹ்யா அவர்களுக்கு “காந்தியார்” பெயரில் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

கோவிட் இரண்டாம் அலையின் போது தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கி ஆக்சிஜன் உற்பத்திக்கு உதவியாற்றியதை பாராட்டி அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

அதுபோல் அமீரகத்தில் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும்,தொழில் வளர்ச்சிக்கும் சேவையாற்றி வரும் ” TEPA ” அமைப்பின் தலைவர் டாக்டர்.பால்.பிரபாகரர் அவர்களுக்கு, அவரது கொரணா கால சேவைகளை பாராட்டி “அன்னை தெரசா” விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

அமீரகத்தில் நீண்ட காலமாக தமிழ் இதழியல் மற்றும் இலக்கிய துறையில் பணியாற்றி வரும் சகோ.முதுவை.ஹிதாயத் அவர்களுக்கு தினத்தந்தி நிறுவனர் “சி.பா ஆதித்தனார்” விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

அமீரகத்தில் இறந்த தமிழர்களின் உடல்களை தாய்நாட்டுக்கு அனுப்பும் சேவைகளை தொடர்ந்து செய்து வரும் லால்பேட்டை சகோ.A.J.முகம்மது மெய்தீன் அவர்களுக்கு “காயிதே மில்லத்” விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

நிகழ்வுக்கு இடையில் குத்தாலம் அஷ்ரப் அவர்கள் ‘இறைவனிடம் கையேந்துங்கள் ° என்ற பாடலை பாடி கூட்டத்தை உற்சாகப்படுத்தினார்.

பிறகு அமீரகத்தில் தமிழக தொழிலாளர்களின் வாழ்வியலை கூறும் குறும்படம் ஒன்றும் திரையிடப்பட்டது.

தொடர்ந்து கிழக்கு இலங்கையின் புகழ்பெற்ற மார்க்க அறிஞர் கலாநிதி, சமாதான நீதவான். அல்ஹாஜ் கபீபு முகம்மது மஃசூன் அவர்கள் அழகு தமிழில்,இலங்கை மொழி நடையில் ‘ரமலான் நோன்பு’ குறித்து உரை நிகழ்த்த அரங்கம் அமைதியுடன் செவிமெடுத்தது.

அச்சமயத்தில் கூட்டம் நிறைந்து உட்கார இடமின்றி நிற்க தொடங்கியது.

வருகை தந்திருந்தவர்களில் பெரும்பாலனவர்கள் 40 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

6.15 மணியளவில் நிறைவாக மஜக பொதுசெயலாளர்.மு.தமிமுன் அன்சாரி Ex.MLA அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அப்போது ரமலானில் உலக அமைதிக்காக பிரார்த்திக்க வேண்டும் என்றவர்,துபையின் வளர்ச்சி குறித்தும் , அதில் தமிழர்களின் முன்னேற்றங்கள் குறித்தும் பேசினார்.

துபாய் Expo 2020 குறித்து பேசியவர், துபையை எழுச்சிமிகு தேசம் என்று வர்ணித்தார்.

சகிப்புத்தன்மைக்கு எடுத்துக் காட்டாக துபை திகழ்வதாகவும், உலகிலேயே மக்களின் மகிழ்ச்சிக்காக தனி அமைச்சகத்தை வைத்திருக்கும் ஒரே நாடு என்றும் பாராட்டினார்.

நேர நெருக்கடி காரணமாக அவர் குறைவான நேரமே பேச முடிந்தது.

கூட்டம் எதிர்பார்த்ததை மீறி, தொடர்ந்து வர அனைவருக்கும் இஃப்தார் விருந்து வழங்குவதில் அமீரக நிர்வாகிகள் அரும்பாடுபட்டு நிலைைமையை சமாளித்தனர்.

பிறகு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேடைக்கு வரிசையாக வந்த அனைவரிடமும் கை குலுக்கி உரையாடி அவர்களுடன் படம் எடுத்து கொண்டார்.

பெரும் திரளானோர் அவருடன் தற்படம் (Selfie) எடுத்துக் கொள்ள,அவர் பொறுமையாக ஒத்துழைப்பு வழங்கினார்.

கொவிட் நெருக்கடிகளுக்கு பிறகு துபையில் தமிழக மக்கள் சார்பில் நடைபெற்ற முதல் பெரும் பண்பாட்டு நிகழ்ச்சி இதுதான் என அனைவரும் பாராட்டினர்.

இறுதியாக துபை மண்டல செயலாளர் சலீம் அவர்கள் நன்றியுரையாற்றனார்.

நிகழ்ச்சிக்கு குத்தாலம்.லியாக்கத் அலி, Power குழும தலைவர் ஜாகீர், ஈமான் பொதுச் செயலாளர் யாசின், அய்மான் ஹபிபுல்லா, பராரி கோல்டு ஆஷிக் அலி, அல் அய்ன் தொழிலதிபர் அப்துல் ஜலீல் என அமீரக பிரமுகர்கள் பலரும் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததும் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

இந்நிகழ்வுக்கு சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை நாடுகளை சேர்ந்த தமிழக வாசிகளும், தமிழகத்திலிருந்து கலைமகன். முபாரக் போன்ற பலரும் வந்திருந்தனர்.

அமீரக பொருளாளர் H.அபுல் ஹஸன் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கப்பட்டனர்.

அமீரக நிர்வாகிகள் தோப்புத்துறை ரெஜாக், கட்டிமேடு ஜாஹீர், யூசுப், J.ஷேக் தாவூது, அடியற்கை A. யூசுப்தீன் , இலந்தங்குடி M. முகம்மது யூசுப், M. முகம்மது தையுப், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

MKP டி.ஷர்ட் அணிந்த தொண்டர் அணியினரின் பங்களிப்பை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பாராட்டி அவர்களுடன் படம் எடுத்துக் கொண்டார்.

துபை மாநகர பொருளாளர் z.பயாஸ் அகமது, அபுதாபி மாநகர செயலாளர் ரசூல் முகம்மது, பொருளாளர் KS M ஹபிபுல்லா, அல் அய்ன் மாநகர செயலாளர் S. முகம்மது இம்ரான், பொருளாளர் M.அப்துல் நாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் மனிதநேய சொந்தங்களோடு தீவிரமாக உழைத்து மக்களை திரட்டியிருந்தனர்.

அமீரகத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க அமைப்பு MKP என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டிருக்கிறது.

(தீர்மானங்கள் அடுத்த பதிவில் வெளியிடப்படும்)

தகவல் :

#தகவல்_தொழில்நுட்ப_அணி
#mkpitwing
#மனதநேய_கலாச்சாரப்_பேரவை
#ஐக்கிய_அரபு_அமீரகம்
09.04.2022