மேற்பனைக்காட்டில் மஜகவின் உண்மை அறியும் குழு! துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் அவர்கள் ஆய்வு..!

ஏப்;9., புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வட்டம் மேற்பனைக்காடு கிராமத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் உண்மை அறியும் குழு ஆய்வு செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வட்டம் மேற்பனைக்காடு கிராமத்தில் செயல்பட்டு வரும் சமூக நல அறக்கட்டளை கட்டிடம் குறித்து கடந்த 4 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்கள் விசம கருத்துக்களை பேசினார்.

பரபரப்பான இச்சூழ்நிலையில் சமூக நல்லிணக்கம் கருதி மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்களின் ஆலோசனையின் பேரில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் மேற்பனைக்காடு கிராமத்தில் மஜக துணை பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், அவர்கள் தலைமையில் உண்மை அறியும் குழு ஆய்வு செய்தது.

மேற்பனைக்காடு ஜமாத் நிர்வாகிகள் முகமது இசாக், பஷீர் அஹமது, முஹம்மது மூசா உள்ளிட்டோர் பங்கேற்று ஊர் மற்றும் ஜமாத் நிலைப்பாடுகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தனர்.

அப்போது பேசிய துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மேற்பனைக்காடு கிராமத்தில் ஒற்றுமையோடு வாழ்ந்து வரும் அனைத்து சமூக மக்களுக்கு மத்தியில் விசக் கருத்துகளை பேசிய எச்.ராஜா மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.

மேற்பனைக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பயன்தரும் வகையில் பல சேவைகளை செய்துவரும் சம்சல்பிவி பொதுநல அறக்கட்டளை கட்டிடம் மற்றும் அதனுடைய சேவைகள் குறித்து குரோதமான வார்த்தைகளை பேசிய எச்.ராஜா தன் கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் என கூறினார்.

மேலும் மேற்பனைக்காடு ஜமாத் நிர்வாகத்தின் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி எப்போதும் துணை நிற்கும் எனவும் கூறினார்.

ஆய்வில் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது, மாவட்ட நிர்வாகிகள் சம்சுதீன், ராம்குமார், ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டை_மாவட்டம்
08.04.2022