கத்தாரின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது… MKP இப்தார் நிகழ்வில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி

ஏப்ரல்.08, வளைகுடாவில் செல்வாக்குமிக்க தமிழர் அமைப்புகளில் மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) முதல் வரிசையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மருத்துவ உதவிகளைச் செய்தல், சமூக நல்லிணக்கத்தை வளர்த்தல், தமிழர் பண்பாடுகளை கொண்டாடுதல் என அதன் செயல்பாடுகள் பலரையும் ஈர்த்து வருகிறது.

பல நாடுகளில் செயல்படுவது போல,கத்தாரில் பல்வேறு பண்பாட்டு மாநாடுகளையும், கருத்தரங்குகளையும், நடத்திவரும் MKP சார்பில் இன்று மூன்றாவது இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கடந்த ஈராண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நிகழ்ச்சிகளை நடத்த முடியாமலும், ஒன்றுகூடல்கள் எதுவும் இல்லாமலும் இருந்த நிலையில், தோஹாவில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வு தமிழக மக்களின் ஒன்றுகூடல் திருவிழாவாக நிகழ்ந்திருக்கிறது.

தோஹா, நஜ்மா, அல்கோர், துகைல் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். பலர் குடும்பத்தினருடன் வருகை தந்திருந்தனர்.

பெரிய எண்ணிக்கையில் கூடுவதற்கு கட்டுப்பாடு இருந்து வரும் நிலையிலும் , திரளானோர் MKP நிகழ்வில் ஒன்று கூடி தங்களது அன்பையும், ஆதரவையும், தெரிவித்தது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்திற்கு காந்தியடிகள் அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது

நிகழ்ச்சி நடைபெற்ற நுழைவாயிற்கு ஹிஜாப் புகழ் ‘வீரமங்கை முஸ்கான்’ அவர்களின் பெயர் சூட்டப்பட்டு பெண்ணியம் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது.

தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களுக்கு நல் வாய்ப்புகளை தந்ததற்கு நன்றி கூறும் வகையில், கத்தாரின் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமது அல்தானி, அவர்களது பெயர் மேடைக்கு சூட்டப்பட்டிருந்தது.

தமிழர்கள் நன்றி உணர்வுள்ளவர்கள் என்பதை கூறும் விதமாக MKP யினர் செய்திட்ட இப்பணியை தமிழர் அமைப்புகளை சேர்ந்த பலரும் பாராட்டினர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக மண்டல துணைச் செயளாலர் பரங்கிப்பேட்டை ரசாக் அவர்கள் நீதி போதனையை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிக்கு MKP யின் கத்தார் மண்டல செயலாளர் ஆயங்குடி யாஸின் தலைமை தாங்கினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை உசேன், அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் உத்தமபாளையம் உவைஸ் தலைமையில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கத்தார் தமிழ் சங்கத் தலைவர் ராம செல்வம்,ICC தலைவர் திரு.பாபு ராஜன், ICBF துணைத் தலைவர் திரு.சியாத் உஸ்மான் , சஹாபாக்கள் நூலக துணைத் தலைவர் தஸ்தகீர் சுலைமான், QMF தலைவர் கடலூர் முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஐக்கிய தமிழ் மன்றம் (UTF) உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளும் வருகை தந்து சிறப்பித்தனர்.

மாலை 5 மணிக்கு தொடங்கிய நிகழ்வில் அரங்கம் நிறைந்து அரங்கிற்கு வெளியேயும் கூட்டத்தை திரண்டிருந்தது.

வழக்கத்தை விட பெரும் திரளானோர் கூடியதால், அனைவருக்கும் இஃப்தார் விருந்து கிடைக்கும் வகையில் மண்டல துணைச் செயலாளர் திருச்சி நஜீர் பாட்ஷா தலைமையில் தொண்டர் அணியினர் சிறப்பாக செயல்பட்டனர்.

அரங்கிற்கு வெளியே பெரிதான வளாகத்தில் இஃப்தார் விருந்து நடைபெற்றது .

முன்னதாக இலங்கையைச் சேர்ந்த அறிஞர் ஜியாவுதீன் மதனீ, அவர்கள் ‘ ரமலான் நோன்பின்’ சிறப்புகள் குறித்தும், அது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும், இலங்கைத் தமிழில் அழகாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற சகோதர சமுதாயத்தவர்கள் அதை மிகவும் உன்னிப்பாக கேட்டு ரசித்தனர்.

அரங்கில் அமைக்கப்பட்டிருந்த மைக் செட், வசதிகள் கேட்போரை உற்சாகப்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. கூட்டம் வெளியே இரண்டு மடங்காக கூடியதால், வெளியே பெரிய தொலைக்காட்சி வைக்கப்பட்டு அவர்களுக்கு வசதி செய்து தரப்பட்டது.

நிகழ்வில் பொன்னாடை களுக்கு பதிலாக பிரமுகர்களுக்கு நூல்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

ICC தலைவர் திரு. பாபு ராஜன் அவர்களுக்கு “காந்தியடிகளின் சுயசரிதை” என்னும் நூலை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பரிசளித்தார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் குஞ்சாலி மரைக்காயர்கள், கான்சாஹிப் மருதநாயகம், ஆகியோர் குறித்து மஹதி அவர்கள் எழுதி யுனிவர்சல் பப்ளிகேஷன் வெளியிட்ட நூல்கள் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது.

அதுபோல் பிற சமூக சகோதரர்களுக்கு பேரா.ராவ் எழுதிய நபிகள் நாயகம் குறித்த ‘முஹம்மது’ என்ற நூலும் வழங்கப்பட்டது.

பொன்னாடைக்கு பதிலாக நூல்கள் வழங்கப்பட்டதை பலரும் பாராட்டினர்.

இஃப்தார் விருந்துக்கு இடைவேளை விடப்பட்டதும், அனைவரும் நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டு, தொழுகைக்கான நேரமும் விடப்பட்டது.

பிறகு நிறைவுரையாக தாயகத்திலிருந்து வந்திருக்கும் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

வளைகுடாவிற்கும், தமிழகத்திற்கும் இடையேயான வரலாற்று மற்றும் வணிக தொடர்புகளை சுட்டிக்காட்டி, இன்றைய கத்தாரின் வளர்ச்சி பிரமிப்பாக இருப்பதாக பாராட்டினார்.

கத்தார் குறித்த அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின் வருமாறு..

கத்தார் உலகின் கவனத்திற்குரிய நாடாக மாறியிருக்கிறது.

நான் 2003ஆம் ஆண்டில் முதன் முதலாக பார்த்த கத்தாருக்கும் இப்போது பார்க்கும் கத்தாருக்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. இது எனது ஐந்தாவது வருகையாகும்.

இப்போது புதுப்புது நகரங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

முத்து கத்தார் என்ற பெயரில் செயற்கை தீவை அமைத்திருக்கிறார்கள்.

உலகின் ஓட்டத்திற்கு போட்டி போடும் நாடாக கத்தார் வளர்ந்திருக்கிறது.

தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதிலும், தொழில் வாய்ப்புகளை வழங்குவதிலும் கத்தார் தாராள மனப்பான்மையோடு இருக்கிறது.

இன்று உலகின் 14% இயற்கை எரிவாயு தேவையை கத்தார்தான் பூர்த்தி செய்கிறது.

மூன்றாவது தனி நபர் வருமானமுள்ள நாடாக வளர்ந்திருக்கிறது .

கத்தார் ஏர்போர்ட் உலகை இணைக்கும் முக்கிய புள்ளியாக மாறியிருக்கிறது. 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்றதோடு , கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், மதிப்புமிக்க தரமான சேவைக்காக விருதுகளையும் பெற்றிருக்கிறது.

CNN, BBC க்கு இணையாக அல்ஜெஸீரா தொலைக்காட்சியை நடத்தி ஆசியாவின் பெருமையாக அதை மாற்றியிருக்கிறது.

மதப் பாகுபாடின்றி அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் கத்தாருக்கும், அதன் மன்னர் ஷேக் தமீம் சுல்தானி, அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவரது உரையை பலரும் வரவேற்று, இது கத்தார் பற்றிய தமிழர்களின் பார்வை என வர்ணித்தனர்.

நிகழ்வுக்கு IT WING கத்தார் செயலாளர் கருப்பூர் உபைஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார்

இந்நிகழ்வில் மண்டல பொருளாளர் திருப்பத்தூர் நிசார் அஹமது MKP யின் செயல்பாடுகள் குறித்து விவரித்து பேசினார்

இந்நிகழ்விற்கு பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெற்றிப் பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.

அது போல் ரமலானை புகழ்ந்து கவிஞர் புதுகை. சிக்கந்தர் அவர்கள் ஒரு கவிதை வாசித்து கைத்தட்டல்களை குவித்தார்.

அதன் பிறகு நிகழ்வின் முத்தாய்ப்பாக “சாரே ஜஹான்சே அச்சா” பாடல் ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்வின் நிறைவாக மஜக பொதுச் செயலாளரை ICC மற்றும் ICBF சேர்ந்த நிர்வாகிகள் வினோத் நாயர் (கேரளா)மகேஷ் (கர்நாடகா) அவினாஸ் கெய்க்வாட் (மும்பை) சுப்ரமணியம்(உடுப்பி ) ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து சென்றனர்.MKP பணிகள் தங்களை கவர்ந்திருப்பதாகவும் பாராட்டினர்

இந்நிகழ்வில் நிறைவாக மண்டல துணைச் செயளாலர் சிதம்பரம் நூர் முஹம்மது நன்றியுரை வழங்க நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

இந்நிகழ்வில் மண்டல துணைச் செயளாலர்கள் பரங்கிப்பேட்டை பாஃரூக் மற்றும் திருச்சி ஹுசைன், கடலங்குடி ஹர்ஃபின், சகாபாக்கள் நூலக தலைவர் மணிகண்டன் ஜயப்பன்,சமூக ஆர்வலர் அத்திக்கடை தளபதி ஹாஜி,மஞ்சகொள்ளை ஃபர்மானுலலாஹ் மற்றும் திரளான மனிதநேய சொந்தங்கள் களப்பணியாற்றி சிறப்பித்தனர்.

தொண்டர் அணியினர் அடையாள அட்டைகள் அணிந்து நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

கொரணாவுக்கு பிறகு கத்தாரில் அதிகமான தமிழர்கள் ஒன்று கூடிய நிகழ்வு இதுதான் என பலரும் வியந்து பாராட்டினர்.

எண்ணற்ற அமைப்புகள், ஜமாத்துகள், தனிநபர்கள் என பலரும் பொதுச் செயலாளரை சந்தித்து அவரது அணுகுமுறைகளையும், மஜகவின் அரசியல் நடவடிக்கைகளையும் பாராட்டினர்.

தகவல்;
#தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#கத்தார்_மண்டலம்
08/04/2022