கத்தார் UTF இஃப்தார் நிகழ்ச்சி… “ரஷ்யாவில் இஸ்லாம்” நூலை வெளியிட்டார் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி…

தோஹா;ஏப்ரல்_07, கத்தாரில் பல்வேறு நிகழ்வுகளில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MA, Ex_MLA, அவர்கள் பங்கேற்று வருகிறார்.

பல்வேறு அமைப்புகள், ஜமாத்துகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் ஐக்கிய தமிழ் மன்றம் (UTF) சார்பில் தோஹாவில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு UTF அமைப்பின் தலைவர் இஸ்மாயில் நாகூரி தலைமை வகித்தார்.

இதில் இந்திய தூதரக தொடர்புடைய ICC அமைப்பின் துணைத் தலைவர் சுப்பிரமணியம் அவர்களும், ICBF துணைத் தலைவர் வினோத் நாயர் அவர்களும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

இதில் பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கத்தாரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு குறித்தும், அது தமிழகத்தில் ஏற்படுத்திய பொருளாதார ஏற்றங்கள் குறித்தும் விவரித்தார்.

இந்நிகழ்வில் காஜா நிஜாமுதீன் யூசுஃபி அவர்கள் எழுதிய “ரஷ்யாவில் இஸ்லாம்” என்ற நூலை மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி அவர்கள் வெளியிட, UTF தலைவர் இஸ்மாயில் நாகூரி பெற்றுக் கொண்டார்.
(நூல் பெற:
9976926131)

மஜக தலைமை செயற்குழு உறுப்பினரும் UTF அமைப்பும் மக்கள் தொடர்பாளருமான கீழக்கரை உசேன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் UTF அமைப்பு கத்தாரில் தமிழர்களுக்கு மத்தியில் ஆற்றி வரும் சேவைகளை UTF பொதுச் செயலாளர் சாகுல் ஹமிது விவரித்தார்.

UTF பொருளாளர் பண்பொழி பஷிர் வரவேற்புரையாற்ற, துணைத் தலைவர் தஸ்தகீர் சுலைமான் , துணைப் பொதுச் செயலாளரும், மஜக தலைமை செயற்குழு உறுப்பினருமான உவைஸ் கமருதீன், திருச்சி ரபீக் மற்றும் UTF நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் கத்தாரில் உள்ள அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் வருகை தந்துள் மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி அவர்களுடன் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் கத்தார் மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் ஆயங்குடி யாசின், மண்டல துணைச் செயளாலர் திருச்சி நஜீர் பாட்ஷா, IT WING செயலாளர் கருப்பூர் உபைஸ் மற்றும் திருச்சி ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#Mjkitwing
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்
07/04/2022

Top