ஜனநாயக தத்துவங்களை பாதுகாப்போம்!கோவை மாநாட்டில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

ஏப்ரல்:2, மதச்சார்பின்மை கோட்பாடுகளை பாதுகாக்கும் மாநாடு கூட்டியக்கம் சார்பில் கோவை லாரிப்பேட்டை மைதானத்தில் நேற்று பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாநாட்டில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார்.

ஃபாசிச சக்திகளால் நமது நாட்டில் நீதிமன்றங்கள் நெருக்கடிகளுக்கு ஆளாகி வருவதையும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டி பேசினார்.

காந்தியும், நேருவும் உருவாக்கிய ஜனநாயக தத்துவங்களை பாதுகாக்க, அனைத்து தரப்பு மக்களுடனும் இணைந்து பணியாற்ற ஆயத்தமாக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அவரது 27 நிமிட எழுச்சி உரை மக்களிடையே பெரும் சிந்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

நேற்று இரவு முதல் முகநூல் உள்ளிட்ட வலைதளங்களிலும் முனைப்போடு பல தரப்பினராலும் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச் செயலாளர்கள் கேப்டன் செய்யது முகம்மது பாரூக், கோவை சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்சா, ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் கோவை சம்சுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், ஹனீபா, மற்றும் மாவட்ட, நகர, பகுதி, கிளை, நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
01.04.2022