ஏப்ரல்:2, கோவையில் ஹைதர் அலி – திப்பு சுல்தான் பள்ளி ஜமாத் சார்பில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அப்பள்ளியின் ஜமாத் தலைவர் செளக்கத் அலி, அவர்கள் திப்பு சுல்தான் நினைவு விருதை வழங்கி சிறப்பித்தார்.
அப்போது மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இப்பள்ளி நிர்வாகத்தின் மருத்துவ சேவை மற்றும் மனிதாபிமான பணிகளை பாராட்டினார்.
இப்பள்ளிக்கு திப்பு சுல்தான் அவர்கள் இடம் வழங்கி தொழுகை நடத்திய வரலாற்று செய்தியையும் குறிப்பிட்டார்.
மேலும் பரந்து விரிந்த இவ்வளாகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் +2 வரையிலான ஒரு பெண்கள் பள்ளிக்கூடத்தை உருவாக்க ஜமாத்தினர் திட்டமிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதைக் கேட்டு மகிழ்ந்த ஜமாத்தினர் இது நல்ல யோசனை என்றும், விரைவில் இதற்கான முயற்சிகளை தொடங்குவதாகவும், உரிய வழிகாட்டலை வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
இதற்கு வக்பு வாரியம் அனுமதி வழங்க சேர்மனிடம் பேசுவதாக , அங்கு வருகை தந்திருந்த பிறைமேடை பத்திரிக்கையின் செய்தி ஆசிரியர் காயல். மகபூப் அவர்களும் கூறினார்.
இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச் செயலாளர் AK.சுல்தான் அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், ஜமாத் முத்தவல்லி அய்யூப்கான், செயற்குழு உறுப்பினர் நிஜாமுதீன், தகவல் தொழில் நுட்ப அணி மாநில பொருளாளர் சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட. துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், உட்பட பலரும் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
01.04.2022