பிப்.19,
நாகை மாவட்டத்தில் இயற்கை எழில்மிகு கிராமமான புஷ்பவனத்தில் புதிதாக கட்டப்பட்ட ஹஜ்ரத் உமர் (ரலி) மஸ்ஜிதில் இன்று நன்றி பாராட்டு மற்றும் விருந்தோம்பல் நிகழ்வு பல சமூக மக்களுடன் நல்லிணக்க கூட்டமாக நடைபெற்றது.
இதில் தோப்புத்துறை ஜமாத் தலைவர் ஜபருல்லாகான் தலைமையேற்றார். ஜமாத் நிர்வாகிகளும், கிராம சான்றோர்களும் முன்னிலை வகித்தனர்.
மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அமைச்சர் OS மணியன், S.K.வேதரத்னம் Ex MLA, கல்வி சமூக சேவகர் ஆரிபா, இந்து சமய அறங்காவல் குழு உறுப்பினர் கிரிதரன், மவ்லவி அபுதாஹிர் பாகவி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.
இப்பள்ளி கட்ட துணை நின்றமைக்காக, அமைச்சர் 0.S மணியனுக்கு மேடையில் அனைவரும் நன்றி கூறினர்.
அங்கு பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், பள்ளிவாசல் என்பது ஆன்மீகம் அமைதி, சமாதானம், ஒற்றுமையை காக்கும் இடம் என்றும், நபிகள் கட்டிய முதல் பள்ளியான மஸ்ஜிதுன் நபவி என்பது கல்வி கூடம், நீதிமன்றம், மருத்துவமனை, ராணுவ மையம், தலைமைச் செயலகம் என பன்னோக்கு கொண்டதாக இருந்தது என்றும் கூறினார்.
அந்த வகையில் புஷ்பவனத்தில் கட்டப்பட்டுள்ள இப்புதிய பள்ளியில் இலவச மருத்துவ முகாம், கல்வி வழிகாட்டல் முகாம், அரசு சேவை முகாம் என அனைத்து மக்களுக்குமான சேவையகமாக செயல்படும் என்று கூறினார்.
இன்றைய இந்நிகழ்வு பல்வேறு மகிழ்வான சம்பவங்களை கொண்டதாக இருந்தது என பலருடன் பத்திரிக்கையாளர்களும், காவல் துறையினரும் பாராட்டினர்.
அவ்வூரை சேர்ந்த இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இது அப்பகுதியின் சமூக நல்லிணக்கத்தை பறைசாட்டும் வகையில் இருந்தது.
அப்பகுதி இந்துக்கள் தங்களோடு இவ்வூரில் வாழும் முஸ்லிம்களுக்கு கைக் குலுக்கி வாழ்த்து தெரிவித்த காட்சிகள் நெகிழ்ச்சியாக இருந்தது.
மார்க்க அறிஞர் சாகுல் ஹமீது ஹஜ்ரத் அவர்கள் உலக அமைதி, நாட்டு நலன், மக்கள் ஒற்றுமை குறித்து தமிழில் சிறப்பான பிரார்த்தனையை முன்னெடுத்தார்.
மதியம் 1.15 அளவில் ஜும்மா தொழுகை நடைபெற்றது.
மேடை நிகழ்வில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திலீபன், ஊராட்சி மன்ற தலைவர் நாடி முத்து, முன்னாள் தோப்புத்துறை முன்னாள் ஜமாத் தலைவர்கள் ஹாஜி Z.கமாலுதீன், KMKI நவாஸ்தீன், டாக்டர் V.G.சுப்ரமணியன், டாக்டர் சொக்கலிங்கம், ஒய்வு பெற்ற ஆசிரியர் தர்மராஜன், ஜமாத் செயலாளர் ஜெய்னுதீன் உள்ளிட்ட பல பிரமுகர்களும், தோப்புத்துறை ஜமாத்தினரும், புஷ்பவனம் ஜமாத்தினரும் பங்கேற்றனர்.
முதல் நாள் இரவு நிகழ்வில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றதும், இன்றைய நிகழ்வில் பல சமூக மக்களும் ஒன்றாக பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.