கோவை ஜும்மா தொழுகையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி…!

ஏப்:01., கோவை ஹைதர் அலி திப்பு சுல்தான் பள்ளிவாசலில் ஜும்மா தொழுகைக்கு பின்பு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் உரையாற்றினார்.

அப்போது பேசியதாவது…

விடுதலைப் போராட்ட தியாகிகளான ஹைதர் அலி, மற்றும் திப்பு சுல்தானின் பெயரால் அமைந்துள்ள இப்பள்ளியில் தொழுது உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அவர்கள் நாட்டின் விடுதலைக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், பாடுபட்டார்கள் ஹைதர் அலியிடம் வேலுநாச்சியார் ராணுவ உதவி கேட்டார்.

அவரை தன் சகோதரியாக அங்கீகரித்து ராணுவ உதவிகளை வழங்கினார்.

தீரன் திப்பு சுல்தானுடன் தீரன் சின்னமலையும், கருப்பசேர்வையும் இணைந்து நின்று ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள்.

அந்த உணர்வுகளையும், உறவுகளையும் , நாம் புரிந்து கொண்டு நிகழ்காலத்தில் பணியாற்ற வேண்டும்.

இன்று மக்களை மதத்தால், வெறுப்பு அரசியலால் பிளந்து சிலர் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.

இதை அறிவுப்பூர்வமாகவும் முதிர்ச்சியுடனும் எதிர்கொள்ளவேண்டும் .

நாம் புனித ரமலானை எதிர்கொண்டுள்ளோம் இதில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ரமலானில் நோன்பு கஞ்சியை நமது தெருக்களில் குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு வழங்கி நேசத்தையும் அன்பையும் பரிமாறவேண்டும்.

ஜமாத்துகள் வார விடுமுறை நாட்களில் பள்ளிவாசலுக்கு அந்தந்த பகுதிகளை சேர்ந்த சகோதர சமுதாய மக்களை அழைத்து இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், சாதி சங்க பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், என அனைவரையும், அழைத்து நோன்பின் நோக்கங்களை எடுத்துக்கூறி நோன்பு கஞ்சியை பரிமாறி உபசரிக்க வேண்டும்.

இதன் மூலம் அன்பு, நெருக்கம், உறவு, புரிதல், ஆகியன வளரும் என்பதை மறந்து விடக்கூடாது.

இந்த புனித ரமலானில் அத்தகைய பணிகளை முன்னெடுத்து அமைதியான சூழல் நாட்டில் வளர நாம் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவரது இக்கருத்தை அனைவரும் வரவேற்றனர்.

இன்றைய ஜும்மா தொழுகையில் சுமார் 1500 க்கும் அதிகமான மக்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
01.03.2022