கடலூர்.பிப்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகமெங்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, தேர்தலில் கவுன்சிலர் பொறுப்புக்கு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
அதில் பல்வேறு சமூகத்தவர், பெண்கள் ஆகியோர் முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாநகராட்சியில் 23-வது வார்டுக்கு மஜக சார்பில் மாற்றுத்திறனாளியான S.ஹாரூன் ரஷீத் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் அப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுபவர். இதனால் அங்கு போட்டி கடுமையாகி உள்ளது.
அனைவரும் நன்கறிந்த பண்பாளர் என்றும், நல்ல மனிதர் என்றும் அனைத்து கட்சியினரும், மக்களும் மதிக்கும் நிலையில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இவருக்கு பொதுச் செயலாளர் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்
01.02.2022