சென்னை.பிப்.02., திமுக கூட்டணியில் தாம்பரம் மாநகராட்சியில் 50-வது வார்டில் மமக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் யாக்கூப் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளரும், செங்கை வடக்கு மாவட்ட மேலிட பொறுப்பாளருமான ஷஃபி அவர்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.
அப்போது அங்கிருந்தவாறு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களிடமும் அலைபேசியில் பேசி ஆதரவு கேட்டார்.
அப்போது மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், மாவட்ட பொருளாளர் தில்சாத் ஆகியோரும் உடனிருந்தனர்.
மஜக சார்பில் அந்த வார்டுக்கு தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, வெற்றிக்கு முழு வீச்சில் களப்பணியாற்றுவதாக மஜக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#செங்கை_வடக்கு_மாவட்டம்
01.02.2022