அதிரை.ஜன.31., தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
அதன் தொடர்சியாக அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி மூன்று வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு தஞ்சை மாவட்ட செயளாலர் அதிரை சேக் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில து.பொதுச்செயளாலர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா, நாச்சிகுளம் தாஜூதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிரையில் வார்டு எண்.5ல் A.பைசல் அஹமது, வார்டு எண் 17ல் B.ஹாஜா மர்ஜூக் B.com, வார்டு எண் 24ல் ஸ்மார்ட்.H.சாகுல் ஹமீது ஆகியோர் வேட்பாளர்களாக அறிமுகம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து அதிரை மஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், அதிரை நகர நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_தஞ்சை_தெற்கு.