திருவாரூர். ஜன.17., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 15-01-2022 சனிக்கிழமை மாலை 5.00 மணியாளவில் பொதக்குடியில் நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட செயலாளர் PMA.சீனி ஜெகபர் சாதிக் அவர்களின் தலைமையில்,
மாவட்ட பொருளாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா, மாவட்ட துணைசெயலாளர் நத்தர்கனி
ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்கு உறுப்பினர் ஜெய்னுதீன் அவர்கள் கலந்து கொண்டு மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை வழங்கினார்.
இதில் திருவாரூர், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நிர்வாக வசதிக்கான ஆலோசனைகள் மற்றும் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் இளைஞரணி மாவட்ட துணைசெயலாளர் ஜபுருல்லாஹ், தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ரிஸ்வான் முஹம்மது ,
இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் அபி, ஒன்றிய செயலாளர்கள் குத்புதீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இவண்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்