கோவை சிறை முற்றுகை போராட்டம் எதிரொலி..! தலைவர்கள்_கைது!

ஜனவரி 8,

மஜக சார்பில் இன்று நடைபெற்ற கோவை சிறை முற்றுகை போராட்டம் மதியம் 12 மணி தொடங்கி 2.45 வரை தலைவர்களின் எழுச்சி உரையோடு நடைப்பெற்றது.

பல்லாயிரக்கணக்காணோரை கைது செய்ய இயலாது என்பதால், காவல் துறை கைது நடவடிக்கை ஏதும் இல்லை என்றது .

அதனால் 90 சதவீத மக்கள் திரும்பி சென்றனர்.

போராட்ட குழுவினர் தலைவர்களையும், மக்களையும் வழியனுப்பிக் கொண்டிருந்த போது, கடைசியாக வந்து 100 பேரை மட்டும் கைது செய்கிறோம் என காவல் துறை கூறியது.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தஞ்சை விசிறி சாமியார், மஜக துணைப் பொதுச் செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா, தைமியா, நாச்சிக்குளம் தாஜ்தீன் உள்ளிட்ட மஜக நிர்வாகிகளும், கோவை மாநகர மாவட்ட நிர்வாகிகளும், எஞ்சியிருந்த களப்பணியாளர்களும் மட்டும் கைதாகினர்.

பொருளாளர் ஹாரூண் உள்ளிட்ட மற்ற தலைமை நிர்வாகிகளை கைதாகாமல், வெளியில் வாகனங்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு தேவையானதை மேற்கொள்ளுமாறு பொதுச் செயலாளர் அறிவுறுத்தினார்.

செய்திக் கேள்வி பட்டு மக்கள் களத்தை நோக்கி மீண்டும் திரும்பி வர பரபரப்பு உருவானது.

உடனே காவல்துறை கைதுக்கு வைத்திருந்த வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, யாரையும் கைது செய்யாமல் தவிர்த்து நகர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
( போராட்ட களத்திலிருந்து..)
#MJKitWING