
ஜனவரி-5.,மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8, அன்று நடைபெறும் கோவை சிறை முற்றுகை போராட்ட பணிகள் பல முனைகளிலும் பலப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் காணொளி (ZooM) வழியாக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடி வருகிறார்.
நேற்று (04.01.2022) மஜக வடமேற்கு மண்டல ஆலோசனை கூட்டம் காணொளி வழியே நடைப்பெற்றது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்ட செயலாளர்களும், இதர மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
அதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசிய உரையின் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு…
ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக நாம் அறிவித்த போராட்டம் மக்களின் பேராதரவை பெற்றிருக்கிறது.
எங்கும் நமது விளம்பரங்கள் மக்களை உசுப்புகின்றன.
பணிகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒமெக்ரான் தொற்று முன் எச்சரிக்கை என அரசு சில உத்தரவுகளை போட்டு வருகிறது. இது ஆரம்ப நிலைதான் எனவும் சொல்லப்படுகிறது.
மக்கள் பெரும்பாலும் இரண்டு தடுப்பூசிகள் போட்டுள்ளனர். நமது போராட்டத்திற்கு வருபவர்கள் பெரும்பாலும் அவர்கள்தான்.
மேலும் அனைவருக்கும் நாமே முகக் கவசங்களும் வழங்குகிறோம்.
மருத்துவ சேவை குழுக்களையும், ஆம்புலன்ஸ்களையும் ஏற்பாடு செய்து, மக்களின் நலம் காக்கும் முன் முயற்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.
நீண்ட தூரத்திலிருந்து வருபவர்கள் ஓய்வெடுத்திட பல தங்குமிடங்களையும் ஏற்பாடு செய்துள்ளோம்.
நோய் தடுப்பு முன் எச்சரிக்கைகளை பின்பற்றுவதில் அக்கறை கொண்டுள்ளோம்.
எனவே திட்டமிட்டப் படி இறையருளால் எழுச்சியாக நமது போராட்டம் நடைபெறும்.
நமக்கு நெருக்கடிகள் புதிதல்ல. நெருக்கடிகளில்தான் நமது கட்சி உருவாகியது.
நமது முதல் மாநாட்டை மார்ச் 26, 2016-ல் நடத்தினோம்.
மாநாடு தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் ஆணையம் திடிரென தேர்தல் தேதியை அறிவித்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவித்தது.
நம்மால் அப்போது சுவர் விளம்பரங்கள் செய்ய முடியவில்லை. சுவரொட்டி கூட ஒட்ட முடியவில்லை.
மாநாடு தேதி நெருங்க, நெருங்க நெருக்கடிகளும் உருவானது.
மாநாடு நடைபெற்ற சென்னை YMCA மைதானத்திற்கு வெளியே கொடி கூட கட்ட முடியவில்லை.
போதிய விளம்பரங்கள் இல்லையே…கூட்டம் வருமா? என பலரும் ஐயம் கொண்டனர்.
அப்போது வளைதளங்கள் மூலம் மட்டுமே பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டது.
இறுதியில் இறையருளால் நெருக்கடிகளை கடந்து பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற்றது.
எனவே இப்போதைய சூழல்களும் நம்மை கடந்து போகும்.
நீதிக்காக நெருக்கடிகளை மீறி கோவையில் திரள்வோம்.
எனவே திட்டமிட்டவாறு பயண ஏற்பாடுகளை செய்து புறப்பட ஆயத்தமாகுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் அப்சர் செய்யது, பாபு ஷாஹின்ஷா ஆகியோரும் பங்கேற்று கலந்துரையாடினர்.
இம்மண்டலத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
#கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம்
#releaselongtermprisnors
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
04.01.2022