
திருப்பூர்.ஜன:04., ஜனவரி 08 கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் கொங்கு மண்டலத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இன்று திருப்பூருக்கு வருகை புரிந்த மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நகரிலுள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து போராட்டத்திற்கு அழைப்பு கொடுத்தார்.
பிறகு ஷாகின் பாக் கூட்டமைப்பு நிர்வாகிகளையும் சந்தித்து போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் வழங்கினார்.
பிறகு மஜக திருப்பூர் தெற்கு, மற்றும் வடக்கு, மாவட்ட செலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து களப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
திருப்பூரிலிருந்து 2500-க்கும் அதிகமான மக்களை அழைத்து வருவதில் உறுதி காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வுகளில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் முஸ்தாக், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மஜித், தெற்கு மாவட்ட பொருளாளர் முஜிபுர் ரஹ்மான், வடக்கு மாவட்ட பொருளாளர் கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், மாவட்ட அணி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
#கோவையில்_திரள்வோம்!
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#திருப்பூர்
04.01.2022