மஜக தென் மாவட்ட செயலாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் ஆய்வு!

ஜன:04., ஜனவரி 8, கோவை சிறை முற்றுகை பணிகள் தென் மாவட்டங்களில் சூடு பிடித்திருக்கிறது.

சுவர் விளம்பரங்கள் போக சுவரொட்டி ஒட்டும் பணிகளும், துண்டு பிரசுர வினியோக பணிகளும் மஜக வினரால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது மக்கள் சந்திப்புகள், அழைப்பிதழ் வழங்கும் பணிகள், வாகன ஏற்பாடுகள் என களப்பணிகள் உச்சத்தை எட்டியுள்ளது.

இதனிடையே தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா. நாசர், அவர்கள் தென் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மேலிட பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு ஏற்பாட்டு பணிகள் குறித்து அலைபேசியில் கேட்டறிந்தார்.

தென் மாவட்ட மக்கள் தங்கும் வகையில் மண்டபங்கள் ஏற்பாடுகளை போராட்ட அமைப்பு குழு செய்து வருவதையும், எனவே திரளாக மக்களை அழைத்து வருவதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

தென் மாவட்ட மக்கள் சிறைவாசிகளின் போராட்டத்திற்கு பேராதரவை வழங்கி வருவதாகவும் மாவட்ட செயலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையம்
03.01.2022