மேட்டுப்பாளையத்தில் கோவை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு..!

ஜனவரி 08 அன்று கோவையில் நடைபெறும் கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் குறித்து கொங்கு மண்டலத்தில் மஜக வினர் தீவிர களப்பணிகளை ஆற்றி வருகின்றனர்.

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று இறுதி கட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்களும், துணை பொதுச்செயலாளரும், ஜனவரி 08 போராட்டக் குழு தலைவருமான செய்யது முகம்மது பாருக், அவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுடன் மாநில துணை செயலாளர் நாகை முபாரக், MJTS மாநில செயலாளர் கோவை ஜாபர் அலி, அவர்களும் பங்கேற்றனர்.

அப்போது மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் பரப்புரைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தற்போது வரை முன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கைகளும் சரிபார்க்கப்பட்டது.

நிறைவாக குறைந்தது 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை போராட்டத்திற்கு திரட்ட மாவட்ட நிர்வாகம் சார்பில் சூளுரைக்கபட்டது.

இந்நிகழ்வின் முடிவில் ஏராளமான இளைஞர்கள் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சுல்தான், மாவட்ட பொருளாளர் ஷேக் மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் பாபு, முகம்மது நிவாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ஆரிப் அப்பாஸ், NMT முபாரக், மகேந்திரன், முன்னாள் மாவட்ட பொருளாளர்கள் MEB அக்கீம், SMR பாரி , கோவை மாநகர் மாவட்ட MJTS செயலாளர் ஷாஜகான், கோவை மாநகர் மாவட்ட MJTS பொருளாளர் ரியாஸ், நீலகிரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஹ்மான், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
03.01.2022