சட்டமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்.. பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வஹாபிடம் மஜக சார்பில் கோரிக்கை மனு..

10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8, 2022 அன்று கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.

இதனிடையே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆங்காங்கே மஜகவினர் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேசிட இன்று முதல் மனு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனவரி 5 அன்று தமிழக சட்டமன்றம் கூடவிருப்பதால், இக்கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்புமாறும், குரலற்ற அம்மக்களுக்கு குரல் கொடுக்க கோரிய கோரிக்கை மனுவை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப் MLA., அவர்களை மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து கையளித்தனர்.

இந்நிகழ்வில் மஜக நிர்வாகிகள் முருகேசன், ராபியா சேக், டில்லி சம்சு ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
03.01.2022