சென்னை.டிசம்பர்.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளர் சீனி முகம்மது அவர்கள் கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது வீட்டில் ஒய்வில் உள்ளார்.
கட்சியினர் அடிக்கடி சென்று அவரை சந்தித்து வருகின்றனர்.
இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அவரது வீட்டிற்கு சென்று நேரில் நலம் விசாரித்தார்.
தற்போது நன்கு உடல் நலம் தேறி வருவதாகவும், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பியதும், வழக்கமான பணிகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் சினி முகம்மது அவர்கள் கூறினார்.
சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக ஜனவரி 8 அன்று கோவையில் அறிவிக்கப்பட்ட போராட்டம் தனக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்ததாகவும் கூறினார்.
இந்த போராட்டத்தில் தாங்கள் ஆரோக்கியத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் அழைப்பு விடுத்தார்.
இச்சந்திப்பின் போது மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லிவாக்கம் சாகுல் ஹமீது, தென் சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் இப்ராகிம் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்திய_சென்னை_மேற்கு_மாவட்டம்
13.12.2021