ஜனவரி 08 கோவை முற்றுகை போராட்டம்!திருச்சி மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டதை அறிவித்துள்ளது.

போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க திருச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பேரா.மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திருச்சி மாவட்டத்தின் சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அந்தோணி ராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சையது முஸ்தபா, அன்வர், சேக் அப்துல்லா, முகமது பீட்ஸா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சையது முகமது மற்றும் சேக் மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருச்சி_மாவட்டம்
12.12.2021