இவ்வாண்டு வடகிழக்கு #பருவமழை தொடக்கத்திலேயே தீவிரம் காட்டியுள்ளதால் தமிழகம் எங்கும் மழை வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது போன்ற தருணங்களில் அரசின் பணிகளுக்கு துணை நின்று, அதிகாரிகளுடன் இணைந்து அனைத்து தரப்பும் களமிறங்குவது மனிதநேய கடமையாகும்.
அந்த வகையில் வழக்கம் போல மனிதநேய ஜனநாயக கட்சியினர் களமிறங்கியுள்ளனர்.
மாவட்ட வாரியாக ‘பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணக் குழு ‘ அமைக்கப்பட்டு, தொண்டர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவுவது, அரசின் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொடுப்பது போன்ற பணிகளில் இக்குழு முழு வீச்சில் ஈடுபட உள்ளது.
எனவே மனிதநேய ஜனநாயக கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் இதில் முழு வீச்சில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
08.11.2021