தஞ்சாவூரை சேர்ந்த அந்த 23 மாத குழந்தை பாரதியின் உயிர் காக்க நிதி சேகரிக்கும் பணிகள் உச்சக்கட்டமாக நடந்து வருகிறது.
முதுகு தண்டு வட தசை நார் சிதைவு SMA TYPE – 2 எனும் அரிய வகை மரபணு குறைபாடு நோயால் அக்குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமெரிக்காவில் 16 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஊசி உள்ளது. இதற்காக பொதுமக்கள் உதவியோடு 14 கோடி வசூல் ஆகி உள்ளது.
மீதி 2 கோடிக்காக அக் குடும்பம் கண்ணீரோடு நிற்கிறது.
இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை ஜும்மா சிறப்பு தொழுகையில் அக்குழந்தைக்காக பொது வசூல் செய்யப்பட்டது.
தஞ்சைமாவட்டத்தில் பரவலாக மனிதநேய ஜனநாயக கட்சியினர் இதற்காக களப்பணியாற்றி வருகின்றனர்.
தஞ்சாவூர் ஆற்றாங்கரை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற நன்கொடை சேகரிப்பில் மஜக வினருடன், கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும் பங்கேற்றார்.
அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது.
இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்காக செல்வந்தர்கள், வணிகர்கள், அலுவலக ஊழியர்கள், உழைப்பாளிகள் ., சாமானியர்கள், ஏழைகள் என பலரும் உதவியதால் 14 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது.
மீதி 2 கோடி ரூபாய் அதிக பட்சம் ஒரு வாரத்திற்குள் கிடைத்தால் மட்டுமே அக்குழந்தையை காப்பாற்ற முடியும்.
ஏற்கனவே இதே நோயால் பாதிக்கப்பட்ட நாமக்கல்லை சேர்ந்த மித்ரா, என்ற குழந்தை இதே போன்ற ஊசியால் காப்பாற்றப்பட்டது. தமிழக அரசும் அதற்கு உதவியதை திமுக இளைஞர் அணி தலைவர் சகோதரர் திரு.உதயநிதி MLA அவர்கள் சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.
எனவே குழந்தை பாரதியையும் காப்பாற்ற கருணை உள்ளத்தோடு தமிழக முதல்வர் அவர்கள் உதவிட வேண்டும் என இந்த அறப்பணியில் ஈடுபடுபவர்கள் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார்.
பிறகு அக்குழந்தையின் தாயார் எழிலரசி கண்ணீர் மல்க , தங்களுக்கு உதவிடுமாறு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 80 நாட்களில் தன்னார்வளர்களின் உதவியுடன் 14 கோடி சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் உதவியுள்ளதாகவும், அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
இந்த இரண்டு கோடி ரூபாய் ஒரு வாரத்திற்குள் கிடைக்காவிட்டால் , 14 கோடி வசூலானது வீணாகிவிடும் என்றவர், தயவு செய்து தமிழக முதல்வர் அவர்கள் இதில் கருணையோடு தலையிட்டு உதவ வேண்டும் என கண் கலங்கினார்.
நாளை தங்கள் குழந்தைக்கு இரண்டாவது பிறந்த நாள் என அவர் கூறிய போது அங்கிருந்தவர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டனர்.
மஹாராஜா ஜவுளி நிறுவனர் முகம்மது ரபீக், அவரது சகோதரர் ஆசிப் போன்ற பலரும் அப்போது உடனிருந்தனர். அந்நிறுவனம் மட்டுமின்றி அதன் ஊழியர்களும் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கியதும், கடையில் உண்டியல் வைத்து வசூல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
அவரைப் போன்ற பலரும், வணிகர்களும், தொண்டு அமைப்புகளும் பல வகையிலும் தங்களுக்கு உதவியதாக குழந்தை பாரதியின் தந்தை ஜெகதீஷ் நன்றியுடன் கூறினார்.
80 நாட்களாக எந்த எதிர்பார்ப்புமின்றி களப்பணியாற்றி வரும் தன்னார்வலர்களும் அங்கு வந்திருந்தனர். அவர்களது மனிதநேய பண்புகளை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மனதாரப் பாராட்டினார்.
இன்றைய இப்பணியில் மஜக மாநில துணைச் செயலாளர் வல்லம் அகமது கபீர், மாநகர மாவட்ட செயலாளர் ஜப்பார், பொருளாளர் அப்துல்லா, lKP மாவட்டச் செயலாளர் ஜாகீர், மாநகர செயலாளர் காமில், உட்பட திரளான மஜக வினரும் பங்கேற்றனர்.
____________
GPAY & Paytm – 9791793435
UPI ID: 9791793435@ybl
தொடர்புக்கு,
தந்தை : 9791793435
தாய். : 9597584987
#SaveBharathi
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்
05.11.2021