கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மாநகராட்சியின் உத்தரவின் பெயரில் கடைகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு வேறு இடத்தில் மாற்று இடம் அளிப்பதாக உறுதி அளித்தனர்
ஆனால் திடீரென மாநகராட்சி நிர்வாகம் கடைகளை பொது ஏலத்தில் விடப்போவதாக அறிவிப்பு செய்தது.
இது வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காய்கனி சிறு வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக நிர்வாகிகள் மனிதநேய ஜனநாயக கட்சியினரை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தில் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ், அவர்களின் தலைமையில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மற்றும் நிர்வாகிகள் இவ்விஷயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு, திமுக மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், அவர்களை நேரில் சந்தித்து மாண்புமிகு நகர்ப்புற அமைச்சர் கே.என் நேரு, அவர்களையும் தொடர்பு கொண்டு ஏலம் விடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததோடு அந்த வியாபாரிகளுக்கே மீண்டும் கடைகள் கிடைப்பதற்கு ஆவண செய்யப்படும் என்பதாக மஜக-வினரிடம் அமைச்சர் உறுதியளித்தார்.
இதற்காக பெரும் முயற்சி மேற்கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகளுக்கு வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் மஜக-வின் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்களுக்கும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, அவர்களுக்கும் திமுக கோவை மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், மற்றும் தோழமை அமைப்புகளுக்கும் மஜக-வின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
27.07.2021