பாபநாசம் தொகுதி தேர்தல் பணிகள்… மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நேரில் கேட்டறிந்தார்!


ஏப்.01,
பாபநாசம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மமக சார்பில் உதயசூரியனில் போட்டியிடும் பேரா.ஜவாஹிருல்லா அவர்களுக்கு வாக்கு கேட்டு அங்கு மஜக வினர் தீவிர தேர்தல் பரப்புரையாற்றி வருகின்றனர்.

அவர் உடல் நலமற்று மருத்துவமனையில் இருக்கும் நிலையில் நேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இன்று (31.03.2021) பரப்புரையின் ஒரு பகுதியாக பாபநாசம் மமக காரியாலத்திற்கு வருகை தந்தார். அவருடன் மஜக மாநில செயலாளர் ராசுதீன் அவர்களும், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் உடன் சென்றனர்.

அவர்களை மமக துணைத் தலைவர் P.S. ஹமீது, அமைப்பு செயலாளர்கள் பாதுஷா, சிவகாசி முஸ்தபா, ரஹூம் ஆகியோர் வரவேற்றனர்.

அங்கு நடைபெறும் தேர்தல் பணிகள், கள நிலவரம் ஆகியவை குறித்து கேட்டறிந்து கடைசி நேர பணிகள் குறித்த ஆலோசனைகளையும் வழங்கினார்.

பிறகு மஜக மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா, மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் மஹ்ரூப், ஆகியோரிடம் மஜகவினர் ஆற்ற வேண்டிய கடைசி நேர  பணிகள் குறித்து கூறிவிட்டு, தேவைப்படின் மீண்டும் இங்கு வருவதாக கூறி விட்டு  புறப்பட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட துணைச் செயலாளர் இப்ராகிம் உள்ளிட்ட மஜக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

தகவல்;

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#பாபநாசம்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021