மாணவர் இந்தியா மாநில தலைவர் திருமணம்! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு!!


மார்ச்.22,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவர் அமைப்பான “மாணவர் இந்தியா” மாநில தலைவர் ஜாவித் ஜாஃபர் திருமணம் கேரளாவில் மலபார் மாவட்டம் மாஞ்சேரியில் நடைப்பெற்றது.

மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்தினர்.

அப்பொழுது அங்கு வருகை தந்த கேரளாவில் தலைசிறந்த கல்வி நிறுவனமான மஹ்தீன் அகடாமியுடைய துணைத்தலைவர் செய்யது முகம்மது பாரூக் ஜமலுல்லைலி தங்கள் அவர்களுடன் கலந்துரையாடினார்.

அவருடன் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அணீஸ், நாகை முபாரக், நெய்வேலி இப்ராஹீம், மாநில இளைஞரணி செயலாளர் அசாருதீன், IKP மாநில செயலாளர் லேனா இசாக், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் ஹமீது ஜெகபர், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அஹமது, துணைச் செயலாளர் திண்டுக்கல் பிர்தௌஸ், கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ், பொருளாளர் T.M.S அப்பாஸ், நீலகிரி மாவட்ட செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள், கோவை மாணவர் இந்தியா செயலாளர் மன்சூர், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் PRO கபீர், வானவில் காதர், கண்டோன்மெண்ட் சமது ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தலைமையகம்.
21.03.2021