மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் நிலைப்பாடு அறிவிப்பு!

image

சென்னை.பிப்.10., இன்று 10.02.17 மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் பொருளாலர் s.s ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், அவைத் தலைவர் நாசர் உமரி, துணைப் பொதுச் செயலாளர்கள் மைதீன் உலவி, மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜூதீன், N.A தைமிய்யா, A.சாதிக் பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பின்வருமாறு…

தற்போது தோழமைக் கட்சியான அதிமுகவில் நிலவிவரும் சூழல் குறித்து அனைவரும் மிகுந்த கவலையடைந்திருக்கிறோம். அதிமுக என்ற திராவிட கட்சி ஒற்றுமையாக, வலிமையாக இருக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி விரும்புகிறது. கூட்டணியின் தலைமைக் கட்சியின் உள்விவகாரம் குறித்து இந்த அளவில் மட்டுமே இப்போது எங்களால் கருத்து சொல்ல முடியும்.

மேலும் இப்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடமும் கருத்து கேட்டறிவது என்றும், கூடுதலாக சமூதாய தலைவர்களிடமும் இது குறித்து ஆலோசனைகளை கேட்பது என்றும், அதுபோல் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு வெற்றித் தொகுதியை கொடுத்த நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி மக்களின் உணர்வுகளையும் கவனத்தில் கொள்வது என்றும் இப்பிரச்சனையை கண்ணியமான முறையில் அணுகுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
10.02.17