மார்ச்:17.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, அவர்களின் அழைப்பின் பேரில் மனிதநேய ஜனநாயக கட்சி தருமபுரி மாவட்டச் செயலாளர் அப்ரார் பாஷா, அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இச்சந்திப்பில் வேட்பாளர் அவர்கள் பேசும்போது தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மஜக சிறப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் தங்களின் பணிகளைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன் வெற்றி பெற்று தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.
இதில் மாவட்ட பொருளாளர் சாதிக் பாஷா, மாவட்ட துணைச் செயலாளர் ஜவகர் பாஷா, மற்றும் நகர, கிளை, நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#தருமபுரி_மாவட்டம்
17.03.2021