மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கிணத்துகடவு தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு!


கோவை:மார்ச்.17.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக குறிச்சி பிரபாகரன், அவர்கள் போட்டியிடுகிறார்.

அது தொடர்பான அனைத்து கட்சி செயல்வீரர்கள் கூட்டம் மதுக்கரை பகுதியில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து உரையாற்றினார்.

இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், கிணத்துடவு தொகுதி பொறுப்பாளர்கள் ஹாருண்ரஷீது, அக்பர்அலி, சலாம், முஜிபுர் ரஹ்மான், மற்றும் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#கிணத்துகடவு_சட்டமன்ற_தொகுதி
#கோவை_மாநகர்_மாவட்டம்
17.03.2021