தாம்பரம் திமுக வேட்பாளரை ஆதரித்து திரு ஸ்டாலின் அவர்கள் பங்கேற்ற பரப்புரை..! திரளான மஜகவினர் இணைந்து வாக்கு சேகரிப்பு..!



தாம்பரம்.பிப்.17.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.எஸ்.ஆர்.ராஜா அவர்களை ஆதரித்து திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்..

பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜிந்தா மதார் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான மஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திரளானோர் திரண்டிருந்த இக்கூட்டத்தில் மஜக-வின் கொடிகள் அதிகளவில் பட்டொளி வீசி பறந்தது கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#TNElections2021
#MJK2021
17.03.2021