2திமுக வேட்பாளர்கள் மஜக நெல்லை மாவட்ட அலுவலகம் வருகை..!


நெல்லை.மார்ச்.15.,

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளித்ததை தொடர்ந்து பாளை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மு.அப்துல்வஹாப், நெல்லை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் A.L.S.லட்சுமனன் ஆகியோர் மஜக நெல்லை மாவட்ட அலுவலகத்திற்கு வருகைதந்து,

மஜக மாநில துணை செயலாளர் A.R.சாகுல்ஹமீது, மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா ஆகியோரை நேரில் சந்தித்து தேர்தல் பரப்புரை குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட துணை செயலாளர்கள் இரா.முத்துக்குமார், வீ.கே.புரம் செய்யதலி, மாவட்ட அணி நிர்வாகிகள் மன்சூர் அலி, புகாரி, அப்பாஸ், கனி, ராபியா சேக், ஒன்றிய செயலாளர்கள் அன்சர்பாபு, கோதர் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#TNElection2021
#MJK2021
#நெல்லை_மாவட்டம்
14-03-2021