கடியாச்சேரி பள்ளி திறப்பு விழா… அவர்கள் பிரிக்கிறார்கள் நாம் இணைக்கிறோம்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு..

பிப்ரவரி.02.,

திருத்துறைப்பூண்டி அருகே கடியாச்சேரியில் இன்று அல் மஸ்ஜித் மூஸா அஜில் பாஜித் என்ற புதிய பள்ளிவாசல் இன்று திறக்கப்பட்டது. இங்கு ஏற்கனவே பழைய நிலையில் ஒரு பள்ளி செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை முன்னிட்டு இருநாள் நிகழ்ச்சிகளை அவ்வூர் ஜமாத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நேற்று இரவு நடைபெற்ற பெண்கள் சிறப்பு நிகழ்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

இன்று மதியம் ஜும்மா சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து MLA, ரஹ்மத் அறக்கட்டளை தலைவர் M.A. முஸ்தபா, ஆரிபா கல்வி குழும தலைவர் சுல்தானுல் ஆரிபின், சேலம் மல்லவி அபுதாகிர் பாகவி, நீடூர் மவ்லவி முகம்மது இஸ்மாயில் பாகவி, திருவாரூர் மாவட்ட ஜமாத்துல் உலமா பொருளாளர் மவ்லவி அப்துல் ரஹ்மான் ஃபைஜி ரஹிமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இப்பகுதியை சேர்ந்த சாதி – சமூக தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் வருகை தந்து சிறப்பித்தனர்.

இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு….

ஒரு பள்ளிவாசல் திறப்பு விழா என்பது இப்பகுதியில் உள்ள அனைத்து சமுதாய மக்களின் வாழ்த்துக்களோடு நடைபெறுகிறது.

காலையில் இந்து சமுதாய மக்கள் ஊர்வலமாக பழத்தட்டுகளுடன் வந்து ஜமாத்தினரிடம் தங்கள் பண்பாட்டின் படி அவற்றை வழங்கி வாழ்த்தியுள்ளனர்.

இப்போது கிரிஸ்த்தவ அருட் சகோதரிகள் வருகைதந்து வாழ்த்தியுள்ளனர்.

இது நமது பகுதியின் உறவுகளை வெளிக்காட்டுகிறது.

வட இந்தியாவை பார்க்கிறோம். அங்கே நடைபெறும் விழாக்களையும் பார்க்கிறோம்.

இப்போது வாரணாசியில் ஞானவாபி பள்ளிவாசலை குறிவைக்கிறார்கள்.

அங்கே கோயிலும், பள்ளிவாசலும் அருகருகே உள்ளது.

அங்கு இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகத்தான் உள்ளனர்.

அதை பிரிக்க நினைக்கிறார்கள்.

நாம் இது போன்ற நிகழ்ச்சிகளில் எல்லோரையும் இணைக்கிறோம்.

இன்றைய சூழலில் மிக கவனமாக செயல்பட வேண்டும்.

சமூக வலைதளங்களில் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

சர்ச்சைக்குரியற்றை ஷேர் செய்யும் பழக்கத்தை கைவிட வேண்டும்

பொது இடங்களில் – ஒலி பெருக்கிகளில் கவனமாக பேச வேண்டும்

உணர்ச்சிகளை தூண்டி விடக் கூடாது.

நடுநிலையாளர்களை சங்பரிவாரங்கள் பக்கம் தள்ளிவிடும் வேலைகளை செய்து விடக் கூடாது.

அரசியலிலும் சமநிலையை கடைப்பிடித்து, தூர நோக்கோடு சிந்தித்து செயல்பட வேண்டும்.

இப்பள்ளிக்கு உதவிகள் செய்த அனைவருக்கும், கட்டிட பணிகளில் பங்கேற்ற தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் இத்தருணத்தில் பிரர்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வை முன்னிட்டு அனைவரையும் வரவேற்று மஜக சார்பில் வரவேற்பு தட்டிகளும் வைக்கப்பட்டிருந்தது.

பிப் 10 – திருச்சி சிறை நிரப்பு முற்றுகை போராட்டம் ஏன்? என்ற துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.

இதில் மாநில துணைத்தலைவர் மன்னை. செல்லச்சாமி, துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா, பொருளாளர் ரஹ்மத்துலலா, தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி. ஜெய்னுதீன், மாவட்ட துணைச் செயலாளர் ஜான், மாவட்ட IT செயலாளர் கட்டிமேடு ஆசிப் திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் நிஜாம் மைதீன், பைசல், கட்டிமேடு கிளை செயலாளர் ஹாரிஸ், கிளை துணை செயலாளர்கள், ஹாரிஸ், தெளபிக், ஆசிப் உசேன், முகம்மது உசேன் அலி, சித்திக் அசாரூதீன், இத்ரிஸ், அப்சர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மஜக நிர்வாகிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றார்கள்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
02.02.2024.