திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம்…! மஜக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு…!


திருவள்ளூர்.மார்ச்.14,

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் திரு.கே.பி.சங்கர் அவர்களது வேட்பாளர் அறிமுக கூட்டம் திருவொற்றியூர் வி.கே.மஹாலில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நாசர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர், திருவொற்றியூர் வேட்பாளர் கே.பி.சங்கர் அவர்கள் மாவட்ட நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

மேலும் திருவொற்றியூர் தொகுதியில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜாஃபர், மாவட்ட துணை செயலாளர்கள்
என்.நிஜாம் பாய், A.மவுலானா,
மாவட்ட அணிச் செயலாளர்கள் ஜலீல், எஸ்.காசிம் ஷரிப், அப்பாஸ் அலி, அப்ரார், திருவொற்றியூர் பகுதி செயலாளர் வெங்கடேசன், பகுதி பொருளாளர் பாபு உள்ளிட்ட மாவட்ட, பகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#TNElections2021
#MJK2021
14.03.2021