புதுக்கோட்டை.ஜன.27.,
கடந்த வாரம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொன்றது தமிழகம் எங்கும் கோப அலைகளை உருவாக்கியது.
நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கோட்டைப்பட்டினம் வருகை தந்து மீனவ பஞ்சாயத்தார்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவருடன் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம் ஆகியோரும் வருகை தந்தனர்.
இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மஜக-வின் நிலைபாடு என அவர்களிடம் கூறினார்.
பிறகு அங்கு படகு துறைக்கு சென்று பார்வையிட்டார். மீனவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் சாஜிதீன், செய்யது அபுதாஹிர், விவசாய அணி மாவட்ட செயலாளர் நாகூர்கனி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் ஷாஜகான், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, ஒன்றிய செயலாளர்கள் முகம்மது இப்ராஹிம், முகமது அப்துல்லா, முஜிபுர் ரஹ்மான், ஒன்றிய துணை செயலாளர் தனபால், கிளை செயலாளர் பரக்கத் அலி, ஜுபைர் கான், இர்ஷாத் கான் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#புதுக்கோட்டை_கிழக்கு
26-01-2021