You are here

காவிரி உரிமை மீட்புகுழு டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடத்திய கூட்டு போராட்டத்தில் மஜக பங்கேற்பு! திரளானோர் கைது!


டிச.12.,

காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் டெல்டா மாவட்டம் முழுவதும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோட்டாட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், அவர்கள் தலைமை தாங்கினார், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ராசுதீன், அவர்கள் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகளை வைத்து போராட்டக்காரர்களை தடுத்தனர் இதனால் காவல் துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர், அவர்களை காவல் துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா, மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், ஒன்றிய செயலாளர்கள் இப்ராஹிம், சாதிக்பாட்சா, மாவட்ட அணி நிர்வாகிகள் ஜஹாங்கீர், குடந்தை நகர செயலாளர் ராஜ் முகம்மது, மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் அரசு கட்சி, தமிழ்த்தேச பாதுகாப்பு கழகம், இந்திய தவ்ஹீத் ஜமாத், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா,விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, உழவர் உரிமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சகோதரர்கள் திரளானோர் கைது செய்யப்பட்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
12.12.2020

Top