நாகை.டிச.8.,
மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தும் போராட்டம் உலகளாவிய கவனத்தை பெற்றிருக்கிறது.
அதற்கு ஆதரவாக இன்று விவசாய சங்கங்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், கட்சிகள், சேவை அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மனிதநேய ஜனநாயக கட்சியினர் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று தமிழகமெங்கும் களத்தில் இறங்கியுள்ளனர்.
நாகை மாவட்டம் தோப்புத்துறையில் டிராக்டர், மாட்டு வண்டிகளுடன், விவசாய தொழிலாளர்கள் புடைசூழ மஜகவினர் திடிர் போராட்டத்தில் குதித்தனர்.
ஒரு மணி நேர அவகாசத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார்.
அப்போது வணிகர்கள் அடுத்தடுத்து கடைகளை அடைக்க தொடங்கி ஆதரவளித்தனர்.
அப்பகுதி முழுக்க பரபரப்பானதும் போக்குவரத்து 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
இந்திகழ்வுக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா தலைமை ஏற்றார்.
பல்வேறு சமூக ஆர்வலர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்க வந்தனர்.
இந்நிகழ்வில் விசாய சங்க நிர்வாகி அருண் குமார், மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் முபீன், மருத்துவ அணி செயலாளர்கள் அபுல் ஹசன், முஸ்தபா, மாலிம் அமானுல்லாஹ், மாணவர் இந்தியா செயலாளர் அப்துல் காதர் மீரான், இளைஞர் அணி செயலாளர் சதாம், தொழிற் சங்கம் செயலாளர் ஜெகபர் தீன், உள்ளிட்ட மஜகவினரும் திரளாக பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
08-12-2020