You are here

தஞ்சை தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம்! துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா மாநில செயலாளர் தாஜூதீன் பங்கேற்பு!


நவ.15,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் அதிராம்பட்டினத்தில், சாரா திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

இதில் மஜக துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் இராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் மற்றும் மாநில விவசாயிகள் அணி செயலாளர் அப்துல் சலாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாவட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினர்.

இதில் மாவட்ட செயலாளராக அதிரை சேக் அவர்களும், பொருளாளராக ஒரத்தநாடு பஷீர் அஹமது அவர்களும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

தொடர்ந்து 75 நாட்கள் மஜகவின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் எழுச்சியோடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மு. மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), நகர நிர்வாகிகள் அதிரை அப்துல் சமது, அஷ்ரப், மதுக்கூர் சாகுல் ஹமீது, மதுக்கூர் ரிபாயூதீன், ஒரத்தநாடு நூருல் அமின், சேக்தாவூது, புதுப்பட்டினம் ஜெகபர் சாதிக், மல்லிப்பட்டினம் ஹுமாயூன் கபிர், சேதுபாவாசத்திரம் சலீம் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #MJK2021
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.

Top