அமைச்சர் துரைக்கண்ணு இல்லத்தில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆறுதல்!


அமைச்சர் துரைக்கண்ணு இல்லத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அவரது இழப்பு தனக்கும், மஜகவினருக்கும் பெரும் வருத்தத்தை தருவதாகவும் கூறினார்.

இங்குள்ள ஜமாத்தினருக்கும், எங்களுக்கும் உள்ள உறவு அவரது தாத்தா காலத்திலிருந்து தொடர்வதாகவும், அதனால்தான் அவர் நலம் பெற இங்குள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றதாகவும் அவர்களின் குடும்பத்தினர் கூறினர்.

அவர் பங்காரு அடிகளாரின் பக்தராகவும், வேளாங்கண்ணி பேராலயத்திற்கு செல்லக் கூடியவராகவும், சுற்றுவட்டார தர்ஹா நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்க கூடியவராக இருந்தார் என்றும் அங்குள்ளவர்கள் கூறினர்.

கொரோனா அச்சுறுத்தலையும் மீறி பொதுமக்கள் அவரது உடலை பார்க்க திரண்டதற்கு இதுதான் முக்கிய காரணம் என்று அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.

இச்சந்திப்பில் பொதுச் செயலாளருடன், மாநிலச் செயலாளர் ராசுதீன், மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ், அமீரக செயற்குழு உறுப்பினர் யூசுப் ஷா, மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது அலி, ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி மற்றும் அப்பகுதி மஜக நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
02/11/2020