இசேவை மையங்களை அதிக அளவில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!


கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் நோய்த்தடுப்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் இப்பணிகளில் அதிக அக்கறை காட்டி வரும் நிலையில், வழக்கமான பணிகளை செய்திட, அங்கு ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.

இந்நிலையில் இ-சேவை மைய ஊழியர்களையும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்படுத்துவதாக தகவல்கள் வருகின்றன.

தற்போது இ- சேவை மையங்களின் பணிகள் அதிகம் தேவைப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீள அரசு வழங்கும் உதவிகள், புதிய தொழில் தொடங்க அரசு வழங்கும் வங்கிக்கடன் ஆகியவற்றிற்கு இ-சேவை மையம் மூலம் பல்வேறு இணைய பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பாக ஆதார் அட்டை விண்ணப்பித்தல் மற்றும் திருத்தம் செய்வது போன்ற தேவைகள் மக்களுக்கு உள்ளது.

சென்னை போன்ற மாநகராட்சிகளில் இடவசதிகள் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டுமே தற்போது இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது.

மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப இ-சேவை மையங்களை அதிக அளவில், பரவலாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
15.10.2020