தஞ்சை திருப்பந்துருத்தியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மஜக ஆர்ப்பரிப்பு! தோழர் பெ மணியரசன் கண்டன உரை!!


அக்.03,
தஞ்சை, திருப்பந்துருத்தியில் விவசாயிகளை அடிமைகளாக்குகின்ற மத்திய அரசின் வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவையாறு ஒன்றிய செயலாளர் ஹபீப் ரஹ்மான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைப்பெற்றது.

மேலத்திருப்பந்துருத்தி பூங்கா பஜார் அருகில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவேரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மற்றும் மாவட்ட செயலாளர் அஹமது கபீர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

தஞ்சை மாநகர செயலாளர் அப்துல்லாஹ் கண்டன கோஷங்களை எழுப்பினார்.

இப்போராட்டத்தில், மேலத்திருப்பந்துருத்தி நிர்வாகிகள் முஹம்மது அசார், முஹம்மது பாரிஸ், சலிம் அக்தர், முஹம்மது பந்தர் நிர்வாகிகள் ஜாபர் சாதிக், அப்துல் ரஹ்மான், முஹம்மது ஜியாவுதீன், கண்டியூர் நிர்வாகிகள் முபாரக் அலி, ஹாரிஸ் அஹமது, முஹம்மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகிக்க முஹம்மது ஜின்னா, முஹம்மது ஜாவித் இமாம், நைனார் முகம்மது உள்ளிட்ட நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

திருப்பந்துருத்தி நகர செயலாளர் முஹம்மது காலித் நன்றி கூறினார்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #திருவையாறு_ஒன்றியம்
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.